பிப்ரவரி 5 ம் தேதி தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, February 3, 2021

பிப்ரவரி 5 ம் தேதி தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்

 பிப்ரவரி 5 ம் தேதி தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்


வேலை வாய்ப்பு முகாம்

கலெக்டர் பொன்னையா வௌியிட்ட அறிக்கை: வரும் 5ம் தேதி திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல தனியார்துறை நிறுவனங்கள்

கலந்துகொள்ள உள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்


எனவே, மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 5ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி ஆட்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment