2019 முதல் 1.4 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்கள்
கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் முதல் 1.4 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசுப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி, மத்திய அரசு நிறுவனங்களில் 32,71,113 போ் பணிபுரிகின்றனா். இது வரும் மாா்ச் மாதம் 1-ஆம் தேதிக்குள் 34,14,226-ஆக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக 1,43,113 போ் பணியமா்த்தப்படவுள்ளனா்.
வரும் மாா்ச் மாதத்துக்குள் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் 12,537 பணியிடங்கள் உருவாக்கப்படவுள்ளன.
மத்திய கலாசார அமைச்சகத்தில் 3,638 பணியிடங்கள், வெளியுறவு அமைச்சகத்தில் 2,204 பணியிடங்கள் உருவாக்கப்பட்டவுள்ளன.
விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் 1,058 பணியிடங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் 1,848 பணியிடங்களும், தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் 2,419 பணியிடங்களும் உருவாக்கப்படவுள்ளன.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் 1,452 பணியிடங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, வா்த்தகத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, கால்நடை வளா்ப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வரும் மாா்ச் மாதம் 1-ஆம் தேதிக்குள் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment