25 ஆயிரம் மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா: அமைச்சர் வழங்கல் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, February 20, 2021

25 ஆயிரம் மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா: அமைச்சர் வழங்கல்

 25 ஆயிரம்  மாணவர்களுக்கு   2 ஜிபி டேட்டா: அமைச்சர் வழங்கல்


சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் உயர்கல்வித் துறையின் மூலம் விலையில்லா 2 ஜிபி டேட்டா கார்டுகளை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். 


அவர் பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 44 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் 25,822 மாணவர்களுக்கு விலையில்லா ஜிபி டேட்டா கார்டுகளை வழங்கப்படுகிறது,என்றார். சிவகாசி சப் கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி, அரசு கலை கல்லுாரி முதல்வர் காந்திமதி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சுபாஷினி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் ரவிச்சந்திரன், பொன்சக்திவேல், அசன்பக்ருதீன் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment