மின்வாரியத்தில் 5,000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அரசுக்கு அனுமதி - Minnal Kalvi Seithi

Breaking

Monday, February 22, 2021

மின்வாரியத்தில் 5,000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அரசுக்கு அனுமதி

 மின்வாரியத்தில் 5,000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அரசுக்கு அனுமதி


மின்சார வாரியத்தில் 5,000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதியளித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2019 மாா்ச் மாதம், தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. ஏற்கெனவே மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பாா்த்து வந்த ஊழியா்கள் இந்த அறிவிப்பாணைக்குத் தடை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்


இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, கேங்மேன் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மின்வாரியம் சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், அனைத்து விதிகளும் முழுமையாக பின்பற்றப்பட்டு, உடல்தகுதித் தோ்வு உள்ளிட்ட 70 சதவீதப் பணிகள் நிறைவடைந்து விட்டன. புதிதாக 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு ஆட்களைத் தோ்வு செய்து நியமிக்கப்பட்டாலும், ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியா்கள் தொடா்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவாா்கள். பணிநீக்கம் செய்யப்படமாட்டாா்கள் என உத்தரவாதம் அளித்தாா்.


இந்த உத்தரவாதத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். தொழிலாளா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் எல்.சந்திரகுமாா் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து அரசுத்தரப்பு உத்தரவாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதியளித்து உத்தரவிட்டனா்.

No comments:

Post a Comment