தமிழாசிரியருக்கு சிலை :மாணவர்கள் அசத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, February 22, 2021

தமிழாசிரியருக்கு சிலை :மாணவர்கள் அசத்தல்

 தமிழாசிரியருக்கு சிலை :மாணவர்கள் அசத்தல்


மறைந்த தமிழாசிரியருக்கு, முன்னாள் மாணவர்கள், 12 லட்சம் ரூபாய் செலவில் சிலை திறந்து, நன்றிக்கடன் செலுத்தி உள்ளனர்.


தஞ்சாவூர் தமிழ்வேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரியின், தமிழ்த் துறை முன்னாள் பேராசிரியர் மற்றும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லுாரி நிறுவனர் விருத்தாசலனார்.இவர், சென்னை பல்கலையில், 'லட்சினையில் கற்றனைத்துாறும் அறிவும் ஆற்றலும்' என்ற தமிழ்த்தொடரை இடம் பெற செய்தவர். சென்னை பல்கலை, பாரதிதாசன் பல்கலையில், ஆட்சிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில், 30 ஆண்டு காலம் பணியாற்றினார். தமிழ் மொழி வளர்ச்சிக்கும், மாணவர் நலனுக்கும் பாடுபட்டு, தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.


தமிழறிஞர் விருத்தாசலனாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரிடம் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, சிலை வைக்க தீர்மானித்தனர்.இதன்படி, 12 லட்சம் ரூபாய் செலவில், வெண்கலத்தில் செய்யப்பட்ட விருத்தாசலனார் முழு உருவச் சிலையை, நாட்டார் திருவருட் கல்லூரி வளாகத்தில் நிறுவியுள்ளனர். முன்னாள் மாணவர்களின் இந்த செயல், அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது

No comments:

Post a Comment