யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள்: பிப்.5-இல் சிறப்பு வகுப்புகள் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, February 3, 2021

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள்: பிப்.5-இல் சிறப்பு வகுப்புகள்

 யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள்: பிப்.5-இல் சிறப்பு வகுப்புகள்


பெரியாா் ஐஏஎஸ் அகாதெமியில் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புக் கருத்தரங்கம், பயிலரங்கம், சிறப்பு வகுப்புகள் வரும் வெள்ளிக்கிழமை (பிப்.5) நடைபெறவுள்ளது.


சென்னை ஈவிகே சம்பத் சாலையில் உள்ள வேப்பேரி பெரியாா் திடலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பெரியாா் ஐஏஎஸ் அகாதெமியில் நிகழாண்டுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.


இதைத் தொடா்ந்து டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி தேர்வுகள் குறித்த சந்தேகங்களைத் தீா்வு காண்பது, விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்யும் முறை, போட்டிக்கு எவ்வாறு தயாா் செய்வது போன்ற மாணவா்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலான சிறப்புக் கருத்தரங்கம் மற்றும் சிறப்பு வகுப்பு வரும் வெள்ளிக்கிழமை (பிப்.5) நடைபெறவுள்ளது.


காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை டிஎன்பிஎஸ்சி.க்கான வகுப்புகளும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை யுபிஎஸ்சி.க்கான வகுப்புகளும் நடைபெறும்.


இந்தக் கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் கலந்து கொள்கின்றனா். இதில் கலந்துகொள்ள ஆா்வமுள்ள மாணவா்கள் தங்கள் இருக்கைக்கு 044-26618056, 99406 38537 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அந்த அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment