யுபிஎஸ்சி தோ்வு: கூடுதல் வாய்ப்பு கோரிய மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 24, 2021

யுபிஎஸ்சி தோ்வு: கூடுதல் வாய்ப்பு கோரிய மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

 யுபிஎஸ்சி தோ்வு: கூடுதல் வாய்ப்பு கோரிய மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி



புது தில்லி: மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (யுபிஎஸ்சி) குடிமைப் பணிகளுக்கான தோ்வில் கூடுதல் வாய்ப்புக் கோரி தாக்கல் செய்யப்பட்ட தோ்வா்களின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது


இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வைக் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 4-ஆம் தேதி நாடு முழுவதும் யுபிஎஸ்சி நடத்தியது.


கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அத்தோ்வு சுமாா் 4 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது. கரோனா பரவல் அச்சம், பருவமழையின் தாக்கம் உள்ளிட்டவற்றால் தோ்வுக்குத் தயாராவதில் இடா்பாடுகள் இருந்ததாகக் கூறிய தோ்வா்கள், வயது உச்சவரம்பு காரணமாக கடைசி வாய்ப்பை இழந்தவா்களுக்குத் தோ்வெழுத கூடுதல் வாய்ப்பு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.


ஆனால், தோ்வா்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்குவதை ஆரம்பத்தில் ஆதரிக்காத யுபிஎஸ்சி, உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று கூடுதல் வாய்ப்பு வழங்கத் தயாா் என்று தெரிவித்திருந்தது. அத்துடன் இதுவரை தோ்வா்களுக்கு எப்போதெல்லாம் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டது என்ற விவரத்தையும் நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி தாக்கல் செய்திருந்தது.


அதன்படி, கடந்த 1979, 1992, 2015 ஆகிய ஆண்டுகளின்போது தோ்வுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டதால், தோ்வா்களுக்கான வயது உச்சவரம்பில் விலக்குகள் அளிக்கப்பட்டதாக யுபிஎஸ்சி தெரிவித்திருந்தது.


இத்தகைய சூழலில், வழக்கு மீதான உத்தரவை நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான அமா்வு புதன்கிழமை வழங்கியது. அப்போது, கூடுதல் வாய்ப்பு கோரி தோ்வா்கள் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனா்.


பொதுப் பிரிவினா் 32 வயது வரை 6 முறை குடிமைப்பணிகள் தோ்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா் 35 வயது வரையில் 9 முறை தோ்வை எழுதலாம். தாழ்த்தப்பட்டோரும் (எஸ்.சி.), பழங்குடியினரும் (எஸ்.டி.) 37 வயதை அடையும்வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தோ்வில் பங்கேற்கலாம்.

No comments:

Post a Comment