அரசு பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்த மாநில அரசு புது முயற்சி - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, February 4, 2021

அரசு பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்த மாநில அரசு புது முயற்சி

 அரசு பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்த மாநில அரசு புது முயற்சி


பெங்களூரு: மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் கட்டாயம் இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. 


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான விளையாட்டு மைதானம் இல்லை என மாநில அரசுக்கு தகவல் கிடைத்தது. மாணவர்களுக்கு கல்வி எப்படி முக்கியமோ அதுபோல் அவர்களுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய விளையாட்டும் மிக முக்கியம் என்றும், 10ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கண்டிப்பாக விளையாட்டு பயிற்சி கொடுக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது


நகர பகுதியில் இருக்கும் பள்ளிகளில் 1 ஏக்கர் நிலமும், புறநகர் பகுதியில் இருக்கும் பள்ளிகளுக்கு 2 ஏக்கரில் விளையாட்டு மைதான நிலமும் இருக்க வேண்டும் என அரசு தெரிவித்திருத்திருந்தது. ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளில் விளையாட்டு மைதானம் அமைக்காமல் அலட்சியம் காட்டுவதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.


அதைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றோலையில் ஒவ்வொரு பள்ளியும் கண்டிப்பாக விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment