தலைமை ஆசிரியர்களை இடம் மாற்ற உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, February 11, 2021

தலைமை ஆசிரியர்களை இடம் மாற்ற உத்தரவு

 தலைமை ஆசிரியர்களை இடம் மாற்ற உத்தரவு


தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை, கவுன்சிலிங் வாயிலாக இடமாறுதல் செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர், பொன்னையா அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:நடப்பு, 2020 - -21ம் கல்வியாண்டில், 40 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. எனவே, தரம் உயர்த்தப்பட்டுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களை, வேறு பள்ளிக்கு மாறுதல் வழியே நியமனம் செய்ய வேண்டும்.


இதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், 40 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்,இடமாறுதல் கவுன்சிலிங்கை விதிகளின்படி நடத்த வேண்டும். மாவட்டங்களில் காலியிடம் இல்லாவிட்டால், வேறு மாவட்டத்துக்கு, மாறுதல் வழங்குவதற்கான விண்ணப்பத்தை பெற்று, இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும். மாறுதல் பெறுவோர், உடனே பணியில் சேர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment