'ஸ்காலர்ஷிப்' அரசு அறிவுரை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, February 14, 2021

'ஸ்காலர்ஷிப்' அரசு அறிவுரை

 'ஸ்காலர்ஷிப்' அரசு அறிவுரை


அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் பி.சி.,~ எம்.பி.சி., மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த, மாணவர்களுக்கு, அரசின், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 


அதன்படி, 2020~21ம் ஆண்டிற்கான, புதிய மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் ஆய்வு கூட்டம் நடந்தது.


இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாவட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட, 86 கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. கல்வி ஆண்டில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களின், உதவித்தொகை விண்ணப்பங்களை, மார்ச் 3ம் தேதிக்குள், 'ஆன்லைனில்' பதிவு செய்ய, கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், கல்லூரிகள் திறக்கப்பட்டிருந்தாலும், பல்கலையில் இருந்து, புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு, இன்றும் பதிவு எண் வழங்கப்படவில்லை. இதனால், புதிய மாணவர்களின் விபரங்களை, பதிவு செய்ய தாமதமாவதாக, கல்வி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment