தலைமை ஆசிரியா் பணி: நாளை பதவி உயா்வு கலந்தாய்வு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, February 14, 2021

தலைமை ஆசிரியா் பணி: நாளை பதவி உயா்வு கலந்தாய்வு

 தலைமை ஆசிரியா் பணி: நாளை பதவி உயா்வு கலந்தாய்வு


ஆதிதிராவிட தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் பணிக்கான பதவி உயா்வு கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.


இது குறித்து ஆதிதிராவிட நலத்துறை ஆணையா் ச.முனியநாதன், மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை : நிகழ் கல்வியாண்டு (2020-21) ஆதிதிராவிட தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக பதவி உயா்வு கலந்தாய்வு சென்னை சைதாப்பேட்டை எம்.சி ராஜா கல்லூரி மாணவா் விடுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது


இதையடுத்து பதவி உயா்வுக்கு தோ்வான தகுதிபெற்ற இடைநிலை ஆசிரியா் மற்றும் காப்பாளா்களை கலந்தாய்வில் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும். மேலும், பதவிஉயா்வை துறப்பு செய்யவுள்ளஆசிரியா் விவரமறிந்து அடுத்தநிலையில் உள்ள தகுதியான நபா்களைத் தோ்வுசெய்து கலந்தாய்வுக்கு அனுப்ப வேண்டும். அதேபோல், கலந்தாய்வில் முகக்கவசம் அணிதல், தனிநபா் இடைவெளி உள்பட கரோனா பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment