அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்கள் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, February 13, 2021

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்கள் அறிவிப்பு

 அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்கள் அறிவிப்பு


அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகிஉள்ளது.


அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 4 வளாகக் கல்லூரிகள், 16 உறுப்பு கல்லூரிகளில் பல்வேறு காலி பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, கணினி மொழி ஆய்வாளர், தொழில்முறை ஆய்வாளர் ஆகிய பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளும், அலுவலக பணியாளர் பணியிடங்களுக்கு 8-ம்வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு மையஇயக்குநருக்கு பிப்.19-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.


கல்வி மல்டி மீடியா ஆராய்ச்சிமையத்தில் உள்ள தகவல் நுழைவாளர் பணியிடம் உள்ளது. மேலும், கல்வி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்துக்கு அறிவியல் துறையில்பிஎச்.டி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை emmrcchennai@annauniv.edu என்ற மின்னஞ்சலுக்கு வரும்18-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக் துறையில் ஜூனியர் ஆராய்ச்சி மாணவர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளன.


விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, sivanandha.prabu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு 20-ம்தேதி மாலை 5.30-க்குள் அனுப்பவேண்டும். மேலும் விவரங்களை https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் அறியலாம்

No comments:

Post a Comment