அரசுப் பள்ளி சுவரில் ஓவியம் வரையும் மாணவர்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, February 13, 2021

அரசுப் பள்ளி சுவரில் ஓவியம் வரையும் மாணவர்கள்

 அரசுப் பள்ளி சுவரில் ஓவியம் வரையும் மாணவர்கள்


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சமூகப் பங்கேற்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதையொட்டி, குழந்தைகளின் கல்வி உரிமை, பெண் கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தூய்மை, சுகாதாரம் குறித்து சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.


இதன்படி, கோவை ஒக்கிலிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று மாணவர்கள் பள்ளி சுவர்களில் ஓவியங்கள் வரைந்தனர். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, "1 முதல் 8-ம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் அஞ்சல் அல்லது வாட்ஸ் அப் மூலம் பெறப்பட்டுள்ளன. சிறப்பான 5 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை வரைந்த மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைத்து, சுவர்களில் ஓவியம் வரையச் செய்கிறோம்.


சிறப்பாக ஓவியம் வரையும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.600, இரண்டாம் பரிசாக ரூ.500, மூன்றாம் பரிசாக ரூ.400 வழங்கப்படும்" என்றனர்

No comments:

Post a Comment