வாரிசு வேலை: வாரியம் அறிவுரை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, February 20, 2021

வாரிசு வேலை: வாரியம் அறிவுரை

 வாரிசு வேலை: வாரியம் அறிவுரை


சென்னை:தமிழக மின் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இறந்து விட்டால், அவர்களின் வாரிசுக்கு, கல்வி தகுதியின் அடிப்படையில், வேலை வழங்கப்படுகிறது.


உயிரிழந்த ஊழியர்கள் பணிபுரிந்த அலுவலகத்தில், வாரிசுதாரர், வேலை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.அங்கு, கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கபட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்படும். அங்கிருந்து, கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ் அனுப்பி, அதன் உண்மை தன்மை சரிபார்த்த பின், தலைமை அலுவலகத்திற்கு வேலை வழங்க கோரி பரிந்துரைக்கப்படும்.


இந்த முறையால், காலதாமதம் ஏற்படுகிறது.இந்நிலையில், வாரிசு வேலை தொடர்பாக பெறப் படும் விண்ணப்பம் மற்றும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது, விரைந்து நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு கருத்துரு வழங்கப்பட்டு உள்ளது.


அதன்படி, வாரிசு வேலை கேட்டு அளிக்கும் விண்ணப்பம் மீது, உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளரால் நடத்தப்படும் கள விசாரணை அவசியமற்றது. பணியில் சேர்ந்த பின், கல்வி தகுதி போலியானது என தெரிந்தால், பணிநீக்கம் செய்து, போலீசில் புகார் அளிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment