1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, February 20, 2021

1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும் என்று கோபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 


ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.


 இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கியதுபோன்று ஷூ, சாக்ஸ் வழங்கப்படும். தேர்தல் வாக்குறுதிகள் தேர்தலுக்கு பிறகே நிறைவேற்றப்படும். ஆனால், பயிர்க்கடன் தள்ளுபடி தேர்தலுக்கு முன்பே செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மட்டும்தான் தள்ளுபடியா? என இங்குள்ள பெண்கள் நினைப்பது தெரிகிறது. உங்களுக்கும் விரைவில் நல்ல தகவல் வரும் என்றார்

No comments:

Post a Comment