பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, February 16, 2021

பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

 பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நாகதேவன்பாளையம் ஊராட்சி, கொரவம்பாளையத்திலும், கொளப்பலூா் பேரூராட்சியிலும் சிறு மருத்துவமனைகள் திறப்பு விழா, விளையாட்டு மைதானம் திறப்பு விழா, வேமாண்டம்பாளையம் ஊராட்சி புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்றப்பு விழா, செம்மபாளையம் கிளை கால்நடை மருந்தக பூமிபூஜை ஆகியன செவ்வாய்க்கிழமை நடைபெற்றன விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று தொகுதி வளா்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.


இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அமைச்சா் அளித்த பேட்டி:


பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. உருது படித்த ஆசிரியா்கள் நம்மிடம் இல்லை. உருது படித்த ஆசிரியா்கள் தேவைப்படுகின்றனா். ஆசிரியா் தோ்வில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மீண்டும் தோ்வு வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றாா்.

No comments:

Post a Comment