திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற அரியர் பாடங்களுக்கு மீண்டும் தேர்வு அறிவிப்பு: கட்டணம் செலுத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, February 14, 2021

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற அரியர் பாடங்களுக்கு மீண்டும் தேர்வு அறிவிப்பு: கட்டணம் செலுத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு

 திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற அரியர் பாடங்களுக்கு மீண்டும் தேர்வு அறிவிப்பு: கட்டணம் செலுத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு


திருவள்ளுவர் பல்கலைக் கழகத் தில் கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அரியர் பாடங் களுக்கான தேர்வை மீண்டும் கட்டணம் செலுத்தி மாணவர்கள் எழுத வேண்டும் என்று அறிவிக் கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளு வர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப் பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் கடந்த ஆண்டு கரோனா பரவலை தடுக்கும் வகையில், மார்ச் மாதம் இறுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது


தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், திருவள்ளுவர் பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.


மேலும், இளநிலை படிப்பில் மூன்றாம் ஆண்டு, முதுநிலை படிப்பில் இரண்டாம் ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் நடத்தி முடிக்கப்பட்டன. அதனுடன், ஏற்கெனவே தோல்வி யுற்ற பாடங்களுக்கான அரியர் தேர்வுகள் நடத்தப்படாமல் அனை வரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், நீதிமன்ற நடவடிக்கை காரண மாக அரசின் அறிவிப்புக்கு முட்டுக் கட்டை போடப்பட்டது.


அரியர் தேர்வுக்கு கட்டணம்


இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதம் நடைபெற இருந்த அரியர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தேர்வு எழுதினால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கருதப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டு இளநிலை இறுதியாண்டு படித்து தற்போது முதுநிலை முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது


மேலும், அரியர் தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி (நாளை) முதல் வரும் 23-ம் தேதி வரை நடைபெறும் என்றும், தேர்வு முடிவுகள் பிப்ரவரி 25-ம் தேதியே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஒவ்வொரு தேர்வு தாளுக்கு ரூ.90 மற்றும் பதிவுக்கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும் என்றும் தெரிவித் துள்ளனர். தேர்வுகளை வீட்டில் இருந்தே மாணவர்கள் எழுதி ஒரு மணி நேரத்துக்குள் அந்தந்த மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளில் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளனர்


மாணவர்கள் போராட்டம்


திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் இந்த திடீர் அறிவிப் பால் மாணவர்கள் அதிர்ச்சியடைந் துள்ளனர். ஏற்கெனவே கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய அரியர் தேர்வுக்கு கட்டணம் கட்டிய நிலையில், தேர்வு நடத் தாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர். இப்போது தேர்வு செல்லாது என்று கூறி மீண்டும் அரியர் தேர்வை எழுதும்படி கூறு கின்றனர். நாங்கள் தேர்வு எழுத தயாராக இருக்கிறோம். ஆனால், கட்டணம் செலுத்த மாட்டோம் என மாணவர்கள் கூறி வருகின்றனர்.


இதை வலியுறுத்தி வேலூர் அண்ணா சாலையில் ஊரீசு கல்லூரி முன்பாக அரியர் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லதா விரைந்து சென்று மாணவர்களை சமாதானம் செய்ததுடன், பல்கலைக் கழகத்தில் முறையிடும்படி அறிவுறுத்தினார். இதனையேற்று மாணவர்கள் மறியலை கைவிட்டனர்


ஆசிரியர் சங்கத்தினர் குற்றச்சாட்டு


திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் அறிவிப்புக்கு பல் கலைக்கழக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாற்றி, மாற்றி அறிவிப்பு வெளியிட்டு மாணவர்களின் கல்வியில் மெத்தனமாக செயல்படும் துணை வேந்தரை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும்


மாணவர்களிடம் தேர்வுக் கட்டணம் மட்டும் வசூலித்து விட்டு தேர்வே நடத்தாமல் மீண்டும் தேர்வு நடத்துவதாகக்கூறி கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. கடந்த ஆண்டு மாண வர்கள் கட்டிய கட்டணத்தின் அடிப்படையில் இப்போது தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


அரியர் தேர்வுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வலியுறுத் துவதைக் கண்டித்து, திருவண்ணா மலை அரசு கலைக் கல்லூரி முன்பு மாணவ, மாணவிகள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.


இது குறித்து மாணவர்கள் கூறும்போது, “கரோனா ஊரடங்கு காரணமாக அரசு கலைக் கல்லூரிகளில் அரியர் தேர்வுக்கு பணம் செலுத்திய மாணவ, மாணவிகள் ‘ஆல் பாஸ்’ என தமிழக அரசு கடந்தாண்டு அறிவித்தது. இந்நிலையில், அரியர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது


அதே நேரத்தில், இந்த தேர்வுக்கு புதிதாக தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என திருவள்ளுவர் பல்கலைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. அப்படி என்றால், ஏற்கெனவே கட்டப்பட்ட தேர்வு கட்டணம் என்னவானது. இது குறித்த கேள்விக்கு பதில் இல்லை.


ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் அரியர் தேர்வை நடத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் என்ற அறிப்பை திரும்ப பெற வேண்டும்” என்றனர்.


இதையடுத்து, அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர், மாணவர்கள் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment