பழநி கல்லூரி மாணவி ஓவியம் வரைவதில் சாதனை - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, February 14, 2021

பழநி கல்லூரி மாணவி ஓவியம் வரைவதில் சாதனை

 பழநி கல்லூரி மாணவி ஓவியம் வரைவதில் சாதனை


பழநியில் 148 அடி நீளத்துக்கு 540 ஓவியங்கள் வரைந்து மாணவி ஒருவர் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள பழநியாண்டவர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் மாணவி சோபியா.

இவர் கல்லூரி விடுமுறை நாட்களில் ‘எனது பூமி’ என்ற தலைப்பில் 148 அடி நீளத்துக்குப் பல்வேறு விதமான 540 ஓவியங்களை வரைந்து சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இதில் உலக நாடுகளின் தேசியக் கொடிகள், தலைவர்களின் படங்கள், விவசாயம், தமிழர் பண்பாடு குறித்த ஓவியங்களும் அடங்கும்

மாணவி வரைந்த ஓவியங்கள் பழநி அரசு அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளனஇதனைப் பலரும் கண்டு ரசித்து மாணவியின் திறமையைப் பாராட்டிச் செல்கின்றனர். தொடர்ந்து ஓவியம் வரையும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாணவி சோபியா, கின்னஸ் சாதனை புரிய முயற்சி மேற்கொண்டு வருகிறார்

No comments:

Post a Comment