திருமண நிதியுதவித் திட்டத்தில் பயனடைய வேண்டுமா? - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, February 14, 2021

திருமண நிதியுதவித் திட்டத்தில் பயனடைய வேண்டுமா?

 திருமண நிதியுதவித் திட்டத்தில் பயனடைய வேண்டுமா?


திருமண நிதியுதவித் திட்டத்தில் பயனடைய வேண்டுமா?


கடந்த இரு தினங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டத்தில் 600 பயனாளிகளுக்கு சமூக நலத்துறை சார்பாக, மூவலூர் இராமாமிர்தம் அம்மை யார் நினைவு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி நிதியுதவி மற்றும் 4 கிலோ 800 கிராம் அளவிற்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.


எளிய மக்கள் பயனடையும் வகையில் இந்தத் திட்டம் மாவட்டந் தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


பயனாளிகள், இதை பெறுவதற்கான வழிமுறைகள் என்ன? இதோ உங்களுக்காக வழிகாட்டுகிறோம்...


ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தமிழக அரசு நிதியுதவி அளிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


திருமணம் செய்துகொள்ளும் பெண் ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டியது அவசியம்


திட்டம் 1


25 ஆயிரம் ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய, மணப்பெண் 10-ஆம் வகுப்புத்தேர்ச்சியோ அல்லது தோல்வியோ அடைந்திருக்கலாம். தனியார் தொலைநிலைக் கல்வி மூலம் படித்திருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்


திட்டம் 2


50 ஆயிரம் ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.


ஆண்டு வருமானம்


ரூ. 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் இந்த உதவித்தொகை வழங்கப்படும். மணமகளின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில், மணமகள் பெயரில் வழங்கப்படும்.


தேவையான சான்றுகள்


பள்ளிமாற்றுச் சான்று நகல், திருமண அழைப்பிதழ், வருமானச் சான்று மற்றும் மணமகளின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அத்துடன் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று இருப்பின் அதை இணைக்கலாம்.


யாரை அணுகுவது


மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையரையும், நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையரையும், ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையரையும் அணுகலாம். தவிர மாவட்ட சமூகநல அலுவலர்கள், சமூகநல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்களையும் அணுகலாம்


ஈ வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்


இத்திட்டமும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதி வசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.


திட்டம் 1


25 ஆயிரம் ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும். இதற்கு கல்வித்தகுதி தேவையில்லை


திட்டம் 2


50 ஆயிரம் ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்


நிபந்தனைகள்


ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விதவைத் தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும். மணமகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.வயது உச்சவரம்பு இல்லை. மணப்பெண்ணின் தாயிடம் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பித்த விதவைத் தாய் இறந்துவிட்டால், மணமகள் பெயரில் வழங்கலாம்.


தேவையான சான்றுகள்


பள்ளிமாற்றுச் சான்று நகல் திருமண அழைப்பிதழ் வருமானச் சான்று பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டப் படிப்பு பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று இருப்பின் அதை இணைக்கலாம்.


அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம்


தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம்.


திட்டம் 1


ரூ. 25 ஆயிரம் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.


திட்டம் 2


ரூ. 50 ஆயிரம் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.


தகுதிகள்


ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டத்திற்கான தகுதிகளே இத்திட்டத்திற்கும் பொருந்தும்


தேவையான சான்றுகள்


சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஆதரவற்றோர் சான்று பெற்று வழங்கலாம் அல்லது தாய், தந்தை இறப்புச் சான்று வழங்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயதுச் சான்று, பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று இணைக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்.


திருமணத்தன்றோ, திருமணத்திற்குப் பிறகோ விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இது மேற்கூறிய மூன்று திட்டங்களுக்கும் பொருந்தும்.


டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்


வாழ்க்கைத் துணையை இழந்தவர்களின் மறுமணத்திற்கு நிதியுதவி அளிப்பதன் மூலம், மறுமணத்தை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.


திட்டம் 1


ரூ.25 ஆயிரம் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப் படும்.


திட்டம் 2


ரூ. 50 ஆயிரம் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப் படும்.


தகுதிகள்


முதல் திட்டத்திற்கு கல்வித் தகுதி தேவை இல்லை. 2-வது திட்டத்திற்கு பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.


பட்டயப்படிப்பு எனில்,தமிழக அரசின் தொழில் நுட்பக்கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக் கப்பட்ட கல்வி நிறுவனங் களில் படித்து தேர்ச்சி பெற்றி ருத்தல் வேண்டும்


வருமான வரம்பு இல்லை


மணமகளின் குறைந்த பட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும். மணமனின் வயது நாற்பதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். திருமண நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப் பிக்க வேண்டும்.


தேவையான சான்றுகள்


விதவைச் சான்று மறுமணப் பத்திரிகை மணமகன் அல்லது மண மகளின் வயதுச் சான்று திருமணப் புகைப்படம் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று


இரு தினங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டத்தில் 600 பயனாளிகளுக்கு சமூக நலத்துறை சார்பாக, மூவலூர் இராமாமிர்தம் அம்மை யார் நினைவு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி நிதியுதவி மற்றும் 4 கிலோ 800 கிராம் அளவிற்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன

No comments:

Post a Comment