வீடு கட்ட கடன் தொகை உயர்த்தி அரசு அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, February 2, 2021

வீடு கட்ட கடன் தொகை உயர்த்தி அரசு அறிவிப்பு

 வீடு கட்ட கடன் தொகை உயர்த்தி அரசு அறிவிப்பு


அரசு ஊழியர்கள் வீடு கட்ட, கட்டிய வீடு வாங்க, தற்போது வழங்கப்பட்டு வந்த கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.


அகில இந்திய பணியில் உள்ள அலுவலர்களுக்கு, வீடு கட்ட வழங்கப்பட்ட, 25 லட்சம் ரூபாய் கடன் தொகை, 2012ம் ஆண்டில், 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. மாநில அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட, 15 லட்சம் ரூபாய், 25 லட்சம் ரூபாயாக, உயர்த்தப்பட்டது.


கடந்த எட்டு ஆண்டுகளில், விலைவாசி, 60 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே, கடன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என, அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, கட்டிய வீடு வாங்க, நிலம் வாங்கி வீடு கட்ட, அகில இந்திய பணியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும், 40 லட்சம் ரூபாய், 60 லட்சம் ரூபாயாகவும், மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், 25 லட்சம் ரூபாய், 40 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, நேற்று வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment