அரசு பள்ளி மாணவிகளுக்கு சி.இ.ஓ., ஆலோசனை - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, February 2, 2021

அரசு பள்ளி மாணவிகளுக்கு சி.இ.ஓ., ஆலோசனை

 அரசு பள்ளி மாணவிகளுக்கு சி.இ.ஓ., ஆலோசனை


செஞ்சி : செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்கு சி.இ.ஓ., ஆலோசனை வழங்கினார். கொரானா நோய் பரவுவதை தடுக்க கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. 


தற்போது பொதுத் தேர்வு எழுத உள்ள 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகின்றன. மாணவர்களுக்கு தேர்வு சுமையை குறைக்க பாட திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பொதுத் தேர்வு நெருங்கி வருவாதல் மாணவ, மாணவிகள் அச்சமின்றி தேர்வு எழுத கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றது.அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களை கல்வி அதிகாரிகள் சந்தித்து நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். 


அதன்படி, நேற்று செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 மாணவிகளுக்கு சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா தேர்வுக்கான ஆலோசனைகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.அப்போது, தலைமையாசிரியை விஜயகுமாரி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment