தமிழ் வளர்ச்சித் துறை உதவித்தொகை உயர்வு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, February 2, 2021

தமிழ் வளர்ச்சித் துறை உதவித்தொகை உயர்வு

 தமிழ் வளர்ச்சித் துறை உதவித்தொகை உயர்வு


தமிழ் மொழி பேசப்படும் பகுதிகளை, தமிழகத்துடன் இணைக்க பாடுபட்ட எல்லை காவலர்கள், அவர்களின் வாரிசுகள், தமிழ் அறிஞர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை உயர்த்துவதற்கான அறிவிப்பு, ஏற்கனவே வெளியானது.

நேற்றைய கவர்னர் உரையில், இந்த உயர்த்தப்பட்ட தொகை குறித்து அறிவிப்பு வெளியானது.


 அதன்படி, எல்லை காவலர்களுக்கு வழங்கப்பட்ட, 4,500 ரூபாய், 5,500 ஆகவும், அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட, 2,500 ரூபாய், 3,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும், 3,500 ரூபாய், 4,500 ஆகவும், அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த, 2,000 ரூபாய் உதவித்தொகை, 2,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment