வனக்காப்பாளர் தேர்வில் 230 பேர் நிராகரிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, February 2, 2021

வனக்காப்பாளர் தேர்வில் 230 பேர் நிராகரிப்பு

 வனக்காப்பாளர் தேர்வில் 230 பேர் நிராகரிப்பு


வனக் காப்பாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்ற, 230 பேர் நிராகரிக்கப்பட்டு உள்ளனர்.


தமிழகத்தில் காலியாக உள்ள, வனக் காப்பாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வு, 2020 மார்ச்சில் நடந்தது. ஊரடங்கு காரணமாக, இதன் தொடர் நடவடிக்கைகள் முடங்கின.இதன்பின், இந்தாண்டு ஜன., 5 முதல் இதற்கான சான்றிதழ் சரி பார்த்தல், உடல் திறன் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 


இதில், உயர் மதிப்பெண்களுடன் தகுதி பெற்றவர்களின் உத்தேச பட்டியல், சமீபத்தில் வெளியிடப்பட்டது


தற்போது, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறித்த விபரங்களை, வனத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, சான்றிதழ்கள் சரியாக இல்லாததால், 107 பேர்; உடல் தகுதி சரியில்லாததால், 123 பேர் என, மொத்தம், 230 பேர் நிராகரிக்கப்பட்டு உள்ளனர்.இவர்களின் பதிவு எண்கள், வனத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன

No comments:

Post a Comment