அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள்: மாநில அரசு திட்டம் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, February 15, 2021

அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள்: மாநில அரசு திட்டம்

 அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள்:  மாநில அரசு திட்டம்

உத்தரப் பிரதேசத்திலுள்ள 75 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.மருத்துவக் கல்லூரி இல்லாத 16 மாவட்டங்களில் தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரிகளை நிறுவ உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. மருத்துவ கல்லூரி உள்ள மாவட்டங்களில் அவை மேலும் மேம்படுத்தப்படும். இதற்கான திட்டத்தை அந்த மாநில அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.


உத்தரப் பிரதேச அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடைநிலையில் மருத்துவ வசதிகளை பலப்படுத்த அரசு விரும்புகிறது என்றார். மேலும் நகரங்கள் மற்றும் கிராமங்களில் மருத்துவ மையங்கள் எண்ணிக்கையை அரசு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment