அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, February 11, 2021

அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை

 அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை


வேலூர் அடுத்த கணியம்பாடி அரசுப் பள்ளிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சிலர் பூட்டு போட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.


வேலூர் அடுத்த கணியம் பாடியில் அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியை யாக ஷர்மிளா சிவரஞ்சனி உள்ளார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சிலருக்கும், தலைமை ஆசிரியைக்கும் இடையில் கடந்த சில நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இதனால், தலைமை ஆசிரியை ஷர்மிளாவை பணியிட மாற்றம் செய்யும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.


இதற்கிடையில், பள்ளி வளாகத்தில் ரூ.72 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணியை தினசரி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும் செங்கல், ஜல்லி, சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் எடுத்து வரும்போது முன்கூட்டியே தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியை கூறியதாக தெரிகிறது. இதனால், ஒப்பந்ததாரர் இடையிலும் பிரச் சினை எழுந்துள்ளது


இந்நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சிலர் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாகவும், தலைமை ஆசிரியைக்கு எதி ராகவும் செயல்பட்டதுடன் பள்ளி யின் நுழைவு வாயில் கேட்டை நேற்று காலை பூட்டு போட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை தலைமை ஆசிரியை முறைகேடாக பயன்படுத் தியுள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றும் குற்றஞ்சாட்டினர். பள்ளிக்கு பூட்டு போட்டதால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் செய்வது தெரியாமல் வெளியில் காத்திருந்தனர்.


இந்த தகவலறிந்த வேலூர் கிராமிய காவல் துறையினர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பள்ளியின் பூட்டை திறந்து வகுப்புகள் செயல் பட ஏற்பாடுகளை செய்தனர். இந்த தகவலை அடுத்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.


இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு, ‘‘சிறிய பிரச்சினைதான். இரண்டு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வகுப்புகள் தடை யில்லாமல் செயல்படுகின்றன’’ என்றார்.

No comments:

Post a Comment