அண்ணா பல்கலை 'அரியர்' தேர்வு அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, February 6, 2021

அண்ணா பல்கலை 'அரியர்' தேர்வு அறிவிப்பு

 அண்ணா பல்கலை 'அரியர்' தேர்வு அறிவிப்பு


இன்ஜினியரிங் மாணவர்களுக்கான, 'அரியர்' தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னை காரணமாக, ஊரடங்கு அமலாகியிருந்த நிலையில், 2020 மே மாதம் நடக்கவிருந்த, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.


இறுதி ஆண்டு மாணவர்களின், இறுதி செமஸ்டர் தவிர, மற்ற செமஸ்டர் தேர்வுகளும், அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' வழங்க, உயர் கல்வி துறை உத்தரவிட்டது. இந்நிலையில், அரியர் மாணவர்களுக்கு, மீண்டும் தேர்வு நடத்த, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.


இதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. 


முதற்கட்டமாக, அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, கிண்டி இன்ஜி., கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபரங்களை, அண்ணா பல்கலையின்,


 acoe.annauniv.edu/Home/ug_tt 


என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment