ஆதார் பதிவு, திருத்தம் செய்ய அஞ்சல் துறை சிறப்பு முகாம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, February 12, 2021

ஆதார் பதிவு, திருத்தம் செய்ய அஞ்சல் துறை சிறப்பு முகாம்

 ஆதார் பதிவு, திருத்தம் செய்ய அஞ்சல் துறை சிறப்பு முகாம்


அஞ்சல் துறையில் ஆதார் பதிவு, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், இன்று நடக்கிறது.


இந்திய அஞ்சல் துறையில் ஆதார் பதிவு, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், இன்று காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை அஞ்சலகங்களில் நடக்கிறது. பொது இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இந்த முகாமில் புதிதாக ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், பெயர், பாலினம், பிறந்த தேதி, மொபைல் போன் எண், மின்னஞ்சல் திருத்தம், 5 மற்றும் 15வது வயதில் பயோ மெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.


ஆதார் திருத்தங்களுக்காக, 50 ரூபாய் சேவை கட்டணமாக பெறப்படும். புதிதாக ஆதார் பதிவு செய்யும் சேவைக்கு கட்டணம் இல்லை.இவ்வாறு அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment