பிளாஸ்டிக்கில் வீடுகட்ட உதவும் கற்கள்: ஒரு பெண்ணின் சாதனை கண்டுபிடிப்பு! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 3, 2021

பிளாஸ்டிக்கில் வீடுகட்ட உதவும் கற்கள்: ஒரு பெண்ணின் சாதனை கண்டுபிடிப்பு!

 பிளாஸ்டிக்கில் வீடுகட்ட உதவும் கற்கள்: ஒரு பெண்ணின் சாதனை கண்டுபிடிப்பு!


இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் வீடு கட்டுவதற்கு செங்கல்களை மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொண்ட கற்களால் வீடுகள் கட்ட முடியும் என்று இளம்பெண் ஒருவர் அசத்தலான கண்டுபிடிப்பு செய்துள்ளார்


பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து வீடு கட்ட உதவும் கற்களை உருவாக்கிய பெண் கென்யா நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கற்களை கொண்டு வீடு கட்டினால் அந்த வீடு ஐந்து முதல் ஏழு மடங்கு உறுதி வாய்ந்தது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்


பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளை செய்யும் முயற்சியில் உலகிலுள்ள பலர் ஈடுபட்டுள்ளனர் அந்தவகையில் கென்யா நாட்டைச் சேர்ந்த இந்த பெண்ணின் அசத்தலான கண்டுபிடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது


பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு ஆக்கபூர்வமான ஒரு விஷயத்திற்கு பயன்படும் என்றும் இதனால் கட்டிடங்கள் வலுவாக இருக்கும் என்றும் செங்கல் கற்கள் தேவைகள் குறையும் என்றும் கூறப்படுகிறது


இதனை அடுத்து இந்த கண்டுபிடிப்புக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

No comments:

Post a Comment