BSNL ன் புதிய அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 3, 2021

BSNL ன் புதிய அறிவிப்பு

 BSNL ன் புதிய அறிவிப்பு


புதிய சினிமா பிளஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ள BSNL: வெறும் ரூ.129-க்கு தொகுக்கப்பட்ட பிரீமியம் OTT சந்தாக்களை பெறலாம்!


அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு ஆபரேட்டரான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நாடு முழுவதும் அதன் வயர்டு பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை தீவிரமாக இழந்து வருகிறது. இதற்கிடையில், டெல்கோவின் வயர்லெஸ் சந்தாதாரர் தளமும் ஏர்டெல் மற்றும் ஜியோ போன்று வேகமாக வளரவில்லை. 


இந்த நிலையில் அதிக சந்தாதாரர்களை கவர்ந்திழுக்க BSNL இப்போது ஒரு புதிய சினிமா பிளஸ் சேவையை (Cinema Plus service) அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெரும்பாலான முக்கிய OTT சந்தாக்களை ஒரே தொகுப்பில் வழங்குகிறது.


இந்த add-on பேக் மற்றும் பிற அனைத்து திட்டங்களும் சினிமா பிளஸ் பேக்கின் கீழ் வரும் என BSNLஅதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்நிறுவனத்தின் கூற்றுப்படி, சினிமா பிளஸ் மறுபெயரிடப்பட்ட பதிப்பைக் கொண்டு யப்டிவி ஸ்கோப் என்டர்டெயின்மென்ட் (YuppTV Scope Entertainment) வழங்கவுள்ளது. 


இது முற்றிலும் யப்டிவிக்கு சொந்தமானது. மேலும் இந்த சினிமா பிளஸ் பேக் தற்போதுள்ள பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் யூசர்களுக்கு மாதத்திற்கு ரூ.129 முதல் பிரத்தியேகமாக கிடைக்கிறது.


பிஎஸ்என்எல் சினிமா பிளஸ் திட்டத்தின் நன்மைகள் 


இதுவரை யப்டிவி ஸ்கோப் என்டர்டெயின்மென்ட் பேக்காக கிடைத்து வந்த சினிமா பிளஸ் பேக், இப்போது BSNL என்டர்டெயின்மென்ட் பேக்காக கிடைக்கிறது. இந்த பேக் மாதத்திற்கு ரூ.129 விலைக் குறியுடன் வருகிறது. 


மேலும் இதில் YuppTV, ZEE5, SonyLIV, மற்றும் Voot உள்ளிட்ட நான்கு OTT சந்தாக்கள் வழங்கப்படுகின்றன. இதுவரை சினிமா பிளஸ் பேக்கின் விலை ஒரு மாதத்திற்கு ரூ.199 ஆக இருந்தது. ஆனால் நிறுவனம் அதை விளம்பர சலுகையின் கீழ் ரூ.129 க்கு வழங்குகிறது.


YuppTV ஓடிடி தளம் 100-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை வழங்குகிறது. அதேபோல ZEE5 ஆப்பில் 80-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், 500க்கும் அதிகமான டிவி தொடர்கள், அசல் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு மொழிகளில் 2000-திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுடன் வருகிறது.


 SonyLIV-ல் 15க்கும் அதிகமான லைவ் டிவி சேனல்கள் மற்றும் 200க்கும் அதிகமான திரைப்படங்களை காணலாம். மேலும் Voot ஆப்பில் 35-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் மற்றும் 400க்கும் அதிகமான திரைப்படங்களுக்கான அணுகலுடன் வருகிறது.


 பிஎஸ்என்எல் சினிமா பிளஸ் பேக் சந்தாதாரர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இலவச உள்ளடக்கத்தைக் காண கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து யப்டிவி ஸ்கோப் செயலியை (YuppTV Scope app) பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதற்கிடையில், பெரிய திரையில் உள்ளடக்கத்தைக் காண உங்கள் Android டிவி மற்றும் அமேசான் ஃபயர் டிவியில் உள்ள YuPPTV ஸ்கோப் ஆப்பையும் அணுகலாம்.

No comments:

Post a Comment