தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, February 16, 2021

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு

 தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனுதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி நர்சரி பிரைமரி பள்ளிகள் நலச்சங்க நிர்வாகிகள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


இச் சங்க மாவட்ட தலைவர் தேவகுமார், மாவட்ட செயலாளர் முருகன் மனுவில், 'கொரோனா பாதிப்பு குறைந்து 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை செயல்படுத்தப்படுகின்றன. அடுத்த கட்டமாக முதல் வகுப்பு முதல் 8 ம் வகுப்புவரையும், அடுத்து எல்.கே.ஜி,. யு.கே.ஜி. வகுப்புகளை திறக்க அரசு வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்.


கொரோனா பிரச்னையால் தேனி மாவட்டத்தில் 80 தனியார் பள்ளிகளில் 10,000 ஆசிரியர்களுக்கு 2020ஜூன் முதல் சம்பளம் வழங்க முடியவில்லை. அவர்கள் வாழ்வாதாரம் பாதித்து பலர் நூறுநாள் வேலைக்கு செல்கின்றனர். தனியார் சுய நிதி பள்ளி ஆசிரியர்களின் துயர் துடைக்க அரசு நிவாரணம் வழங்கிட வேண்டும்,' என கோரினர்

No comments:

Post a Comment