வைகுண்டர் அவதார தினம் அரசு விடுமுறை தர கோரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, February 13, 2021

வைகுண்டர் அவதார தினம் அரசு விடுமுறை தர கோரிக்கை

 வைகுண்டர் அவதார தினம் அரசு விடுமுறை தர கோரிக்கை


அய்யா வைகுண்டர் அவதார தினத்தை, அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும்' என, கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அதன் விபரம்:

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்: ஆன்மிக சீர்திருத்தவாதியும், ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டவரும், கடவுள் அவதாரமாக கருதப்படுபவருமான, அய்யா வைகுண்டர் அவதார திருநாளான, மாசி மாதம், 20ம் தேதி ஆண்டுதோறும், தலைமை பதி அமைந்துள்ள, சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் கோவிலில், திருவிழாவாக கொண்டாடப்படுகிறது


திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய, ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராக புரட்சி செய்து, மன்னரின் மனதை மாற்றி, நல்வழிப்படுத்திய, அய்யா வைகுண்டரை, தமிழகம் எங்கும் மக்கள் வணங்கி வருவதால், மாசி, 20ம் தேதி, அதாவது மார்ச், 4 அன்று, தமிழகத்தில் பொது விடுமுறை அளிக்க வேண்டும்.


தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ்: அய்யா வைகுண்டர் சுவாமி, 189வது அவதார தினம், மார்ச், 4ல் கொண்டாடப்படுகிறது.

 அய்யா வழி பக்தர்கள், தமிழகம் முழுதும் உள்ளனர். அய்யாவழி பக்தர்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அய்யா அவதார தினத்தன்று, தமிழக அரசு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment