மருத்துவக்கனவு மாணவருக்கு மகிழ்ச்சி: இனி, இரண்டு முறை 'நீட்' தேர்வு எழுதலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, February 13, 2021

மருத்துவக்கனவு மாணவருக்கு மகிழ்ச்சி: இனி, இரண்டு முறை 'நீட்' தேர்வு எழுதலாம்

 மருத்துவக்கனவு மாணவருக்கு மகிழ்ச்சி:  இனி, இரண்டு முறை 'நீட்' தேர்வு எழுதலாம்


இந்தாண்டு முதல், ஆண்டுக்கு இருமுறை 'நீட்' தேர்வு நடத்தப்பட உள்ளதால், மருத்துவராகும் கனவுடன் உள்ள மாணவர்கள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.'நீட்' தேர்வை அதிகபட்சம், ஒரு மாணவர், மூன்று முறை எழுத முடியும். ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு, ஜே.இ.இ., எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது


.கடந்த 2019 முதல், நுழைவுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டு முதல், 'நீட்' தேர்வுக்கும் இதே நடைமுறை, பின்பற்றப்பட உள்ளதுமாணவர்கள், பெற்றோர்கள் கூறியதாவது


:இரண்டு தேர்வையும் மாணவர்கள் எழுத முடியும். அதிக மதிப்பெண் எதில் கிடைத்ததோ, அது கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம், முதல் தேர்வை சரியாக எழுத முடியாவிட்டால், இரண்டாவது தேர்வை எழுதுவதற்கு, சற்று கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.


ஊரடங்கு அமலில் இருந்ததால், தமிழகத்தில், பொது தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதேசமயம், 'நீட்' தேர்வு வழக்கமான பாடத்திட்டத்தின்படிதான் நடத்தப்பட உள்ளது. இது, மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். ஜே.இ.இ., தேர்வை, இந்தாண்டு முதல் ஆண்டுக்கு நான்கு முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment