பொது மாறுதல் கலந்தாய்வு P.G ஆசிரியர்கள் கண்டனம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, February 13, 2021

பொது மாறுதல் கலந்தாய்வு P.G ஆசிரியர்கள் கண்டனம்

 பொது மாறுதல் கலந்தாய்வு P.G ஆசிரியர்கள் கண்டனம்


தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக முதுகலை ஆசிரியர்களுக்கு முன்னதாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது” என தமிழ்நாடு 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது

பி.ஜி., ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவிஉயர்வு வழங்காமல் பட்டதாரி 

ஆசிரியர்களுக்கு மாறுதல் மற்றும் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு துவங்கியுள்ளது வழக்கத்திற்கு மாறானது.இதனால் 

மாறுதலுக்காக காத்திருக்கும் பி.ஜி., ஆசிரியர்கள் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர்களால் நிரப்பப்பட்டுவிடும். இது கண்டிக்கத்தக்கது. 


எனவே வழக்கம் போல் பி.ஜி., ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் உள், வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வை முன்கூட்டியே நடத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் 2019 ல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் போராட்ட காலத்தை பணிக்காலமாக கருதி அதற்கான பணப் பலன் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்ட பதவி 

உயர்வுகளை வழங்க அரசு முன்வரவேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் சந்திரன் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment