ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, February 13, 2021

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு

 ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு


ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு பிப்ரவரி 23 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த டிசம்பா் 16-இல் தொடங்கி ஜன.23-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.


தொடா்ந்து ஜேஇஇ தோ்வுக்கான தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட் ) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாணவா்கள் இணையதளத்தில் சென்று தங்கள் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம். இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் தொலைபேசி எண் ( 0120-6895200) அல்லது மின்னஞ்சல் முகவரி  வழியாக தொடா்பு கொள்ளலாம்.


எந்த மாணவருக்கும் தபால் வழியாக நுழைவுச் சீட்டு அனுப்பப்படாது. கூடுதல் தகவல்களை  வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment