தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வுகளை நடத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, February 4, 2021

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வுகளை நடத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

 தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வுகளை நடத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு


தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வுகளை நடத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 4  வாரகாலம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பால குருசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.


இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, பல பல்கலைக்கழகங்கள், தேர்வு முடிவுகளை வெளியிட்டதாகவும், அதற்கு தடை விதிக்க கோரி  வழக்கு தொடரப்பட்டது


இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆன் லைன் அல்லது ஆஃப் லைன் மூலம் அரியர் தேர்வுகளை நடத்தி,  அதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.


இந்நிலையில் இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், கொரோனா சூழல் தணிந்து தற்போது கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும், அரியர் தேர்வுகள் நடத்தியது குறித்து பல்கலைக்கழகங்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதால், அதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இதை ஏற்ற நீதிபதிகள், 4  வார கால தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி, வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்

No comments:

Post a Comment