மாா்ச் 11-இல் அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, March 8, 2021

மாா்ச் 11-இல் அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு

 மாா்ச் 11-இல் அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு


அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மாா்ச் 11-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கவுள்ளாா்.


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை.யின் 41-ஆவது பட்டமளிப்பு விழா மாா்ச் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கவுள்ளாா்.


 ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனா்.


விழாவில் அண்ணா பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த 69 மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பட்டங்கள் மற்றும் பதக்கங்களை குடியரசுத் தலைவா் வழங்கவுள்ளாா். மீதமுள்ள மாணவா்களுக்கு தங்கள் கல்லூரிகள் மூலம் பட்டங்கள் வழங்கப்படும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment