12 கல்லூரிகளை நிர்வகிக்க அரசு அதிகாரிகள் நியமனம்: கவர்னரிடம் ஆசிரியர்கள் சங்கம் மனு: நிதித்துறை உத்தரவை திரும்பபெற கோரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, March 18, 2021

12 கல்லூரிகளை நிர்வகிக்க அரசு அதிகாரிகள் நியமனம்: கவர்னரிடம் ஆசிரியர்கள் சங்கம் மனு: நிதித்துறை உத்தரவை திரும்பபெற கோரிக்கை

 12 கல்லூரிகளை நிர்வகிக்க அரசு அதிகாரிகள் நியமனம்: கவர்னரிடம் ஆசிரியர்கள் சங்கம் மனு: நிதித்துறை உத்தரவை திரும்பபெற கோரிக்கை


டெல்லி பல்கலையின் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து துணை நிலை ஆளுநர் அலுவலகம் நோக்கி நேற்று பேரணி சென்றனர். 


அப்போது, டெல்லி அரசாங்கத்தின் உயர்கல்வி இயக்குநரகம் வழங்கிய ‘உதவி முறை’’(பேட்டர்ன ஆப் அசிஸ்டெண்ட்) என்கிற  சந்தேகத்திற்குரிய ஒரு ஆவணத்தை திரும்பப்பெற வேண்டும். ஏனெனில், இந்த ஆவணம் மூலம் ”தேசிய கல்வி கொள்கையின் நிபந்தனைகளை அரசு திணிக்க முயற்சிக்கிறது.


 அதோடு, டெல்லி பல்கலையின் கீழ் செயல்படும் இந்த 12 கல்லூரிகளும் 100 சதவீதம் அரசின் நிதியுதவி பெற்று டெல்லி பல்கலை கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஆவணம் கூறுகிறது. இது தவறானது


எனவே உயர்கல்வித்துறையின் இதுதொடர்பான உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டனர்.


 மேலும், டெல்லி அரசின் நிதியுதவியில் இயங்கும் 12 கல்லூரிகளை கவனிப்பதற்காக முத்த நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்க உத்தரவிட்ட நிதித் துறையின் உததரவையும் திரும்பபெற வேண்டும். 12 கல்லூரிகளையும் டெல்லி அரசு டெல்லி பல்கலையிலிருந்து விலக்கி தனது கட்டுபாட்டில் கொண்டு வந்து அவற்றை சுயநிதி கல்லூரிகளாக மாற்றும் முயற்சியை அரசு கையாள்கிறது.


இந்த கல்லூரிகளுக்கு நிதியுதவி வழங்குவதை தவிர்க்கவே இதுபோன்ற செயலில் அரசு ஈடுபட்டுள்ளது. 


இந்த கல்லூரிகளுக்கு காலண்டுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க உத்தரவிட வேண்டும். அப்போது தான் டெல்லி பல்கலை ஆசிரியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பாதிப்பை சந்திக்கமாட்டார்கள் என துணை நிலை ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தனர்

No comments:

Post a Comment