டெல்லி மாநிலத்திற்கு தனியாக பள்ளிக்கல்வி வாரியம் பதிவு: விரைவில் அரசாணை வெளியிட முடிவு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, March 18, 2021

டெல்லி மாநிலத்திற்கு தனியாக பள்ளிக்கல்வி வாரியம் பதிவு: விரைவில் அரசாணை வெளியிட முடிவு

 டெல்லி மாநிலத்திற்கு தனியாக பள்ளிக்கல்வி வாரியம் பதிவு: விரைவில் அரசாணை வெளியிட முடிவு


டெல்லி மாநிலத்திற்கு என்று தனியாக பள்ளிக்கல்வித்துறை வாரியம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.  டெல்லி பள்ளிக்கல்வித்துறையை சீரமைக்க கடந்த ஆண்டு ஜூலைமாதம் ஆம்ஆத்மி அரசு முடிவு செய்தது.


 இதற்கான கட்டமைப்பை உருவாக்க இரண்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மேலும் டெல்லி மாநிலத்திற்கு என்று தனியாக பள்ளிக்கல்வித்துறை வாரியம் அமைக்கவும், பாடத்திட்டம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 


இதற்கான அறிவிப்பை டெல்லி அரசு முறைப்படி வெளியிட்டு, அதற்கு அமைச்சரவை கூட்டத்திலும் ஒப்புதல் பெறப்பட்டது. இதுபற்றி சமீபத்தில் பேட்டி அளித்த முதல்வர் கெஜ்ரிவால், தற்போதைய கல்வி முறை மனப்பாடம் செய்து படிப்பை மட்டுமே கொண்டுள்ளது.


அதில் மாற்றம் வேண்டும். மேலும் உயர் தொழில்நுட்ப அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வசதியாக புதிய கல்வி வாரியம் அமைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். மேலும் புதிய கல்வி வாரியத்தின் கீழ் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் கொண்டு வரப்படாது.


 தனியார் பள்ளிகள் விரும்பினால் இதில் இணையலாம் என்றும் அறிவித்து இருந்தார். இதன் அடிப்படையில் டெல்லி பள்ளிக்கல்வி வாரியம் தொடங்க மார்ச் 6ம் தேதி அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது.


 இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை இந்த பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி வாரியத்தின் செயல்திட்டங்கள், பாடத்திட்டங்கள், மறுசீரமைப்பு முறைகள் விரைவில் அரசாணையாக வெளியிடப்படும் என்று தெரிகிறது.


2021-22 கல்வி ஆண்டில் டெல்லி பள்ளிக்கல்வி வாரியத்தின் கீழ் 20 முதல் 25 அரசு பள்ளிகள் மட்டும் இணைக்கப்படும். அதன்பின் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்து பள்ளிகளும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 இதுதொடர்பாக பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அரசாணையில் பள்ளிக்கல்வி வாரியம் செயல்படும் முறைகள் விரிவாக விளக்கப்படும். இந்த டெல்லி பள்ளிக்கல்வி வாரியத்திற்கு மாநிலகல்வி அமைச்சர் தலைவராக இருப்பார். இதன் அன்றாட செயல்பாடுகள் தனி நிர்வாக அமைப்பை கொண்டு இருக்கும்.


இதன் தினசரி செயல்பாடுகளை கண்காணிக்க தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படுவார். நிர்வாக செயல்பாடுகளில் தொழில்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள், கல்வித்துறையில் சிறந்தவர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்று இருப்பார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment