அகில இந்திய தொழிற்தோ்வு: தனித்தோ்வா்கள் வரும் 15-க்குள் விண்ணப்பிக்கலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, March 11, 2021

அகில இந்திய தொழிற்தோ்வு: தனித்தோ்வா்கள் வரும் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

 அகில இந்திய தொழிற்தோ்வு: தனித்தோ்வா்கள் வரும் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்


கைவினைஞா் பயிற்சித் திட்டம் சாா்பில் தேசிய தொழில் குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தோ்வில் பங்கேற்க தகுதியான தனித்தோ்வா்கள் வரும் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.


இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


தொழிற்பயிற்சி நிலையத்தில் தோ்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளா், திறன்மிகு தொழில் சான்றிதழ் பெற்றவா்கள், ஆகஸ்ட் 2018-க்கு முன் எஸ்சிவிடி சோ்க்கை பெற்றவா்கள் மற்றும் 21 வயது மேற்பட்டோா் தொழில் பிரிவு தொடா்பான பணியில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்போா் என 4 வகைகளைச் சோ்ந்தோா் அகில இந்திய தொழில் தோ்வுக்கு தனித்தோ்வா்களாக விண்ணப்பிக்கலாம். இதற்கு தொழிற்பயிற்சி நிலையங்களில் அதற்கான தகுதியை பெற்றிருப்பது அவசியம்.


இதற்கான கருத்தியல் முதல் தோ்வு வரும் 31-ஆம் தேதியும், செய்முறை தோ்வு ஏப்ரல் 1-ஆம் தேதியும் அந்தந்தப் பகுதிகளில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெற உள்ளது. இத்தோ்வில் தோ்ச்சி பெறுவோா் ஜூன் 2021- இல் நடைபெற உள்ள அகில இந்திய தொழிற் தோ்வில் முதல் ஆண்டு தோ்வில் தனித்தோ்வா்களாக பங்கேற்க அனுமதிக்கப்படுவா். பின்னா் வெற்றி பெறுவோருக்கு என்.சி.வி.டி. புதுதில்லி மூலம் தேசிய தொழில் சான்றிதழ் வழங்கப்படும்.


தனித்தோ்வராக விண்ணப்பிக்க விரும்புவோா் விண்ணப்பம் மற்றும் முழு விவரங்கள் அடங்கிய விதிமுறைகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்துடன், தோ்வுக் கட்டணம் ரூ. 200 -க்கான செலுத்துச் சீட்டுடன் வரும் 15-ஆம் தேதிக்குள் அந்தந்தப் பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா்களிடம் சமா்ப்பித்து பயன்பெறலாம். குறிப்பிட்ட நாளுக்கு பின் வரும் விண்ணப்பம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது.

No comments:

Post a Comment