அரசு பள்ளியில் 16 மாணவிகளுக்கு கொரோனா தொற்று: 7 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, March 11, 2021

அரசு பள்ளியில் 16 மாணவிகளுக்கு கொரோனா தொற்று: 7 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவு

 அரசு பள்ளியில் 16 மாணவிகளுக்கு கொரோனா தொற்று: 7 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவு


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவிகள் 5 பேருக்கு கடந்த 6-ம் தேதி கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. விடுதியில் தங்கிஇருந்து பள்ளிக்கு வந்து சென்ற இந்த மாணவிகள் அனைவரும் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மருத்துவமனையில் அனுமதி


இதையடுத்து, பள்ளியில் பயிலும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என 300 பேருக்கு கடந்த 8-ம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது


இதில், மேலும் 11 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி ஏற்பட்டுள்ளது நேற்று தெரியவந்தது. இதையடுத்து, 11 பேரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அப்பள்ளியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.


இதையடுத்து, பள்ளிக்கு7 நாட்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் ராமன் உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment