ரூ.1,999க்கு 'ரீசார்ஜ்' : BSNL சலுகை - Minnal Kalvi Seithi

Breaking

Friday, March 5, 2021

ரூ.1,999க்கு 'ரீசார்ஜ்' : BSNL சலுகை

 ரூ.1,999க்கு 'ரீசார்ஜ்' :  BSNL சலுகை


'பிரீபெய்டு'வாடிக்கையாளர்கள், 1,999 ரூபாய்க்கு, 'ரீசார்ஜ்' செய்தால், 30 நாட்கள் கூடுதல் 'வேலிடிட்டி' வழங்கப்படும் என, பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது.


பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதற்கு, பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதில், ஆண்டு முழுதும் அளவில்லா அழைப்புகள் பெற, 1,999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது, 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படும்.


தற்போது, 1,999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 30 நாட்கள் கூடுதலாக, 395 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது.


தினந்தோறும் 2ஜி.பி., டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., 395 நாட்களுக்கு பி.எஸ்.என்.எல்., டியூன்ஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment