மருத்துவ மேற்படிப்புக்கான 'நீட்' தேர்வு | கூடுதல் மையங்கள் அமைக்க கோரி வழக்கு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, March 5, 2021

மருத்துவ மேற்படிப்புக்கான 'நீட்' தேர்வு | கூடுதல் மையங்கள் அமைக்க கோரி வழக்கு

 மருத்துவ மேற்படிப்புக்கான 'நீட்' தேர்வு |  கூடுதல் மையங்கள் அமைக்க கோரி வழக்கு


மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' தேர்வை நடத்துவதற்கு, அதிக மையங்களை அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கும், தேர்வு வாரியத்துக்கும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லுாரை சேர்ந்த, வழக்கறிஞர் வீரப்பிள்ளை ரமேஷ் தாக்கல் செய்த மனு:மருத்துவ மேற்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு, விண்ணப்பங்களை வரவேற்று, தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வரும், 15ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்; ஏப்., 18ல் தேர்வு நடக்கிறது. 


மொத்தமுள்ள, 255 தேர்வு மையங்களில், தமிழகத்தில், 28; புதுச்சேரியில் ஒன்று என, அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்காகஇணையம் செயல்பட துவங்கிய சில மணி நேரங்களில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மையங்களையும், மாணவர்கள் தேர்வு செய்து விட்டனர்.


இதனால், புதிதாக விண்ணப்பம் சமர்பிப்பவர்கள், வெளி மாநில மையங்களை தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.தேர்வுக்கு முந்தைய சில நாட்களில், வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டும். அங்கு தங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதனால், மாணவர்களுக்கு மன உளைச்சல், கவனச்சிதறல் ஏற்படும்.


எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அதிக மையங்கள் அமைக்க, தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சத்திகுமார் சுகுமார குருப் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, மத்திய, மாநில அரசுகள் மற்றும் தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 8ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment