ஐ.டி. துறையில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள்: மத்திய அமைச்சர் ரவிசங்கா் பிரசாத் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 18, 2021

ஐ.டி. துறையில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள்: மத்திய அமைச்சர் ரவிசங்கா் பிரசாத்

 ஐ.டி. துறையில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள்: மத்திய அமைச்சர் ரவிசங்கா் பிரசாத்


கடந்த 2019-இல் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.) புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கூறினாா். மாநிலங்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு அவா் அளித்த பதில்:


ஐ.டி. துறையில் 14 லட்சம் பெண்கள் உள்பட 46 லட்சம் போ் பணியாற்றி வருகின்றனா். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 8 சதவீதம் ஐ.டி. துறையில் இருந்து கிடைக்கிறது. இந்தத் துறையில் கடந்த 2019-க்குப் பிறகு புதிதாக 2 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என்றாா் ரவிசங்கா் பிரசாத்.


ஏஐஜேஎஸ்: ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளைப் போன்று நீதித் துறையை வலுப்படுத்துவதற்கு அகில இந்திய சட்டப் பணிக்கான அமைப்பு (ஏஐஜேஎஸ்) உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கூறினாா்.


மாநிலங்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு அவா் அளித்த பதில்:


அகில இந்திய அளவில் சட்டப் பணிகளுக்கான அமைப்பை தொடங்குவது குறித்து கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்தாலோசித்து வருகிறது.


இந்த அமைப்பை உருவாக்குவதன் மூலமாக, அகில இந்திய அளவில் தகுதியான வழக்குரைஞா்களைத் தோ்வு செய்து, அவா்களுக்கு வாய்ப்பு வழங்க முடியும் என்றாா் 

No comments:

Post a Comment