அடுத்த கல்வி ஆண்டை, ஜூலை 15ல் துவக்க மாநில அரசு முடிவு  - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, March 18, 2021

அடுத்த கல்வி ஆண்டை, ஜூலை 15ல் துவக்க மாநில அரசு முடிவு 

 அடுத்த கல்வி ஆண்டை, ஜூலை 15ல் துவக்க மாநில அரசு முடிவு 


கர்நாடகாவில், அடுத்த கல்வி ஆண்டை, ஜூலை, 15ல் துவக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.


கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், துவக்க மற்றும் இடைநிலைக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கூறியதாவது


:கர்நாடகாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வைரஸ் பரவலை கருத்தில் வைத்து, 2021 - 22க்கான கல்வி ஆண்டை, ஜூலை, 15ல் துவக்க முடிவு செய்துள்ளோம்


பள்ளிகள் சரியாக திறக்கப்படாததால், மாணவர்கள், கணிதத்தில் பலவீனமாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளன.


 மாணவர்களின் உடல் நலத்துடன், கல்வி தரத்திலும், அரசு அக்கறை வைத்து, நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். வழக்கமாக, ஜூன் மாதத்தில் தான், புதிய கல்வியாண்டு துவக்கப்படும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment