அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு 6 மாத சம்பளம்,ஓய்வூதியம் வழங்க ஒப்புதல்  - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, March 18, 2021

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு 6 மாத சம்பளம்,ஓய்வூதியம் வழங்க ஒப்புதல் 

 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு 6 மாத சம்பளம்,ஓய்வூதியம் வழங்க  ஒப்புதல் 


அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு 6 மாத சம்பளம்,ஓய்வூதியம் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.கவர்னர் மாளிகை செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:


புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் 2021 பிப்ரவரி வரை, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள 35 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்கவும், கடந்தாண்டு செப்டம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை ஆறு மாத காலத்திற்கு 6 மாத சம்பளம் வழங்கவும் ரூ. 27 கோடியே 85 லட்சத்து 56 ஆயிரத்து 96 பள்ளி கல்வித் துறையின் செலவினத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment