600 மரங்கள்... அளவில்லா ஆக்சிஜனுடன் பள்ளி வளாகம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 12, 2021

600 மரங்கள்... அளவில்லா ஆக்சிஜனுடன் பள்ளி வளாகம்!

 600 மரங்கள்... அளவில்லா ஆக்சிஜனுடன் பள்ளி வளாகம்!


திருப்பூர்:ஆசிரியர்கள், மாணவர்களின் ஒத்துழைப்போடு நகருக்கு மத்தியில், 600க்கும் மேற்பட்ட மரங்கள் பராமரித்து வருவதாக காலரை தூக்கிவிடுகிறது, ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி.


வேம்பு, அரசு, புங்கை, பூவரசு, மலைவேம்பு, தேக்கு உள்ளிட்ட மரங்களுடன் சிறிய வனம் நடுவே இருப்பது போல, பள்ளி வளாகம் காட்சியளிக்கிறது. ஐம்பதாண்டு பழமையான, 200 மரங்கள் கம்பீரமாக உள்ளன. 

பள்ளியில் என்.எஸ்.எஸ்., தேசிய பசுமைப்படை மாணவர்கள் தாங்களாக குழுவாக சேர்ந்து மரங்கள் பராமரிப்பில் ஈடுபடுகின்றனர்.


தினமும் காலை, மாலையில் சிறிது நேரம் ஒதுக்கி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடுவது, கன்றை சுற்றி தண்ணீர் தேங்க குழி அமைப்பது, முட்செடிகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். தற்போது வண்ணங்கள் அடிக்கப்பட்டு, நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்டதால் மேலும் புதுப்பொலிவுடன் ரம்மியமாக காட்சியளிக்கிறது.


தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா கூறியதாவது


:மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், பள்ளி சுற்றுச்சூழலில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். குறிப்பாக, இயற்கை சூழலை மாணவிகளுக்கு உருவாக்க மரம், செடிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மரத்தடியில் அழகிய வண்ணங்கள் தீட்டியுள்ளோம்.இவற்றை பராமரிக்க பள்ளி முன்னாள் மாணவியர்கள், தன்னார்வலர்கள் பலர் உதவி புரிந்துள்ளனர். 


நம்பர் பிளேட் மாட்டி, மரத்தை வெட்டக்கூடாது என்பதை எடுத்துரைக்கிறோம். தற்போது பள்ளி வளாகத்திற்குள், 612 மரங்களும், சுற்றுச்சுவர் ஒட்டிய வெளிப்புறங்களில் 100 மரங்களும் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.


மாணவியர் சிலர் கூறியதாவது:எங்கள் பள்ளியில் அதிக மரங்கள் இருப்பதால், நல்ல காற்றோட்டமாக இருக்கிறது. இதனால், புத்துணர்வோடு படிக்கிறோம். தூயகாற்றை சுவாசிப்பதால் நோய்கள் அண்டுவது இல்லை. 


இதே போல தான் நம் குடியிருப்பு பகுதிகளிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்.மழைவளத்தை பெருக்கி, நிலத்தடி நீர்மட்டம் உயர்வது எப்படி உள்ளிட்ட பல விஷயங்கள் கற்றுகொடுக்கப்படுகிறது. வனங்களில் மரம்வெட்டுவதை தடுத்து, அதில் ஈடுபடும் சமூக விரோதிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்போது தான் வனங்கள் பாதுகாக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment