தேர்தல் பயிற்சிக்கு வராத அலுவலர்கள், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Friday, March 12, 2021

தேர்தல் பயிற்சிக்கு வராத அலுவலர்கள், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை

 தேர்தல் பயிற்சிக்கு வராத அலுவலர்கள், ஆசிரியர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை


தேர்தல் பணியை தவிர்க்கும் நோக்கத்துடன், பயிற்சியை தவிர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளில் நடக்கும் தேர்தலுக்கென அரசுப்பள்ளி ஆசிரியர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 22,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


 இவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி, வரும் 14ம் தேதி நடக்கிறது. பயிற்சிக்கான ஆணை வழங்குவதற்கு முன்னதாக, அனைத்து தேர்தல் பணி அலுவலர்களின் விபரத்தொகுப்பு, கம்ப்யூட்டரில் பதிவேற்றப்பட்டுள்ளது


பயிற்சிக்கான ஆணை, அந்தந்த அலுவலர், ஊழியர், ஆசிரியர்களின் அலுவலக உயர் அதிகாரி மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.'


அலுவலர்கள் இந்த பயிற்சியை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல் பணியை தவிர்க்கும் பொருட்டு, பயிற்சிக்கு வராத அலுவலர்கள், ஆசிரியர்கள் மீது தேர்தல் ஆணைய விதிப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, கலெக்டர் ராஜாமணி எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment