பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி:அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, March 29, 2021

பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி:அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

 பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி:அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


பொறியியல் மாணவர்களுக் கான ஆன்லைன் தேர்வுகள், ஏப்ரல் 15 முதல் 22-ம் தேதி வரைநடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச்மாதத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன


செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், இறுதி ஆண்டு படித்த மாணவர்களுக்கு மட்டும் இறுதி செமஸ்டர் தேர்வு கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆன்லைனில் நடத்தப்பட்டது.


இந்நிலையில் கரோனா பாதிப்பு சற்று தணிந்ததால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொறியியல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், கரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து, இறுதி ஆண்டு மற்றும்எம்இ, எம்டெக் மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது.


வழிகாட்டு நெறிமுறைகள்


இந்நிலையில், பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்மையில் வெளியிட்டது.


அதன்படி ஆன்லைன் தேர்வுகள், ஏப்ரல் 15 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும். செய்முறைத் தேர்வுகள் மார்ச் 31-க்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஒருவேளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் செய்முறைத்தேர்வுகளை நடத்த இயலாவிட் டால் பல்கலைக்கழகத்திடம் முன்அனுமதி பெற்று பின்னர் நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment