9, 10, 11-ம் வகுப்புகளுக்காக கல்வித் தொலைக்காட்சியில் பாடங்களை அதிகரிக்க உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, March 29, 2021

9, 10, 11-ம் வகுப்புகளுக்காக கல்வித் தொலைக்காட்சியில் பாடங்களை அதிகரிக்க உத்தரவு

 9, 10, 11-ம் வகுப்புகளுக்காக கல்வித் தொலைக்காட்சியில் பாடங்களை அதிகரிக்க உத்தரவு


கல்வித் தொலைக்காட்சியில் 9, 10, 11-ம் வகுப்புகளுக்கான பாடங்களை அதிகரிக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


தமிழகத்தில் கரோனா பரவல்தணிந்ததால் 10, 12-ம் வகுப்புகளுக்கு கடந்த ஜனவரி 19-ம் தேதியும், 9, 11-ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8-ம் தேதியும் பள்ளிகள்திறக்கப்பட்டு, நேரடி முறையில்வகுப்புகள் தொடங்கப்பட்டன.


இதற்கிடையே 9, 10, 11-ம்வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்வதாக அரசு அறிவித்தது. ஆனாலும், அவர்களுக்கு தொடர்ந்து வகுப்புநடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், மீண்டும் கரோனா பரவல் அதிகரிப்பதால், 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் பொதுத் தேர்வு நடக்க உள்ளதால் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்களை தொடர்ந்து நடத்தலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது. 'அரசுப் பள்ளிகளில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு எஞ்சியுள்ள பாடங்களை கல்வித் தொலைக்காட்சி வழியாக நடத்தவேண்டும். அதற்கேற்ப, அவர்களுக்கான பாடங்கள் ஒளிபரப்பை தொலைக்காட்சியில் அதிகரிக்க வேண்டும்' என்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 comments:

  1. First online class. Next nobody studies the books. Then free pass. Is this a education? Education is kuttichevru

    ReplyDelete
  2. First online class. Next nobody studies the books. Then free pass. Is this a education? Education is kuttichevru

    ReplyDelete