தொடர் தேர்தல் பயிற்சி வகுப்பு: சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, March 2, 2021

தொடர் தேர்தல் பயிற்சி வகுப்பு: சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

 தொடர் தேர்தல் பயிற்சி வகுப்பு: சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்


மதுரையில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுரேஷ், பொது செயலாளர் மனோகரன் தெரிவித்துள்ளதாவது:பள்ளிகளில் மாணவர் வருகை சனிக்கிழமைகளில் பெருமளவு குறைந்துவிடுகிறது. 

ஆறு நாட்களும் பள்ளிகள் நடப்பதால் அவர்கள் சோர்வு அடைகின்றனர்.


 ஒரு வகுப்பிற்கு 25 மாணவர் மட்டுமே வைக்க வேண்டும் என்ற நிலையில், ஆசிரியர்கள் அனைவரும் ஒரு நாளில் ஒரு வகுப்பு கூட ஓய்வின்றி ஆறு நாட்களும் தொடர்ந்து வகுப்பிற்கு செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் ஆசிரியர்ளுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்படவுள்ளது.


 இதையொட்டி தேர்தல் பயிற்சி வகுப்பு ஒவ்வொரு ஞாயிறும் நடக்கும் பட்சத்தில் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றும் சூழல் ஏற்பட்டால் ஆசியர்களுக்கும் மன உளச்சலை ஏற்படுத்தும்.எனவே சனி விடுமுறை அறிவிக்க கல்வி அதிகாரிகள் உடன் உத்தரவிட வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment